முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலைபாதுகாப்பு வாரவிழாவின் 3வது நாளான நேற்று மதுரையில் கல்லூரி மாணவ,மாணவிகளுக்ககான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை,- சாலை பாதுகாப்பு  வாரவிழாவின் 3 வது நாளான நேற்று மதுரையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது
சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இன்றைய சாலைபாதுகாப்பு  நிகழ்ச்சி மதுரை தியாகராசர் கல்லூரியில் மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வடக்கு எஸ்.கருப்பசாமி, மதுரை தெற்கு பி.சுரேஷ், நடுவம் கி.கல்யாணகுமார், கல்லூரி முதல்வர் பிரகாஷ் முன்னிலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சின்னகருத்தப்பாண்டி சாலை பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தார். மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு குறித்து பேசினார். மதுரை நடுவம் வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார் பேசும் போது, கடந்த கால விபத்து சதவீத நிகழ்வுகளை சுட்டிக்காட்டி வரும் காலத்தில் விபத்து சதவீதத்தை குறைத்து சாலை விபத்துக்கு நான் காரணமாகமாட்டேன் என்ற உறுதிமொழியை ஏற்க செய்தார். 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து