முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டமன்றபேரவை பொதுகணக்கு குழுவினர் நேரில் ஆய்வு

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுத் தலைவர் கரி.இராமசாமி, மற்றும் குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் நா.கார்த்திக் (சிங்காநல்லூர்) டி.செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி), உ.தனியரசு (காங்கேயம்), ஆர்.நடராஜ் (மயிலாப்பூர்), முனைவர்.பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தி), மாணிக்கம் (சோழவந்தான்) ஆகியோர்  ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்  அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் துறை சார்ந்த கணக்குகள்  குறித்து ஆய்வு மற்றும் தணிக்கை செய்தார்கள்.  மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன்,   சட்டமன்ற பேரவை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார்கள். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுத் தலைவரும், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கரி.இராமசாமி தலைமையிலான சட்டமன்ற குழு உறுப்பினர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் தற்போது முன்னேற்றத்திலுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து 24.04.2018 மற்றும் 25.04.2018 ஆகிய இரண்டு தினங்கள் ஆய்வு செய்வதற்காக வருகை தந்துள்ளார்கள். அதன்படி hமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் மண்டபம் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்கள்.  அதன் தொடர்ச்சியாக நேற்று இருமேனி ஊராட்சிக்குட்பட்ட குப்பானிவலசை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரணி மேம்பாட்டு பணிகளையும், ரூ.55 ஆயிரம் மதிப்பில் இவ்வூரணி கரையோரத்தில் பயன்பெறும் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளையும், ரூ.1 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளையும்  ஆய்வு செய்தார்கள்.
 அதன்பிறகு பெருங்குளம் கிராமத்தில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.26 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் உப்புநீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், கழுகூரணி கிராமத்தில் நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாம்பாலம்மன் கோவில் ஊரணி ஆழப்படுத்தும் பணிகளையும், சக்கரக்கோட்டை கிராமத்தில் உள்ள கண்மாயில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பாக ரூ.105.76 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் சீரமைப்பு பணிகளையும், மாடக்கொட்டான் கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ்  கழிவுநீரை பயனுள்ள வகையில் மறுசுழற்சி செய்வதற்காக செயல்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள்.
 அதனைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் குழுவினர் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் துறை சார்ந்த கணக்குகள்  குறித்து ஆய்வு செய்தார்கள்.  குறிப்பாக வருவாய்த்துறையின் மூலம்  நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அரசு நிலங்களை அரசிற்கு இழப்பீடு இல்லாத வகையில் குத்தகைக்கு விடுதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் மூலம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், மீன்பிடி இறங்குதளங்கள் அமைத்தல் மற்றும் அவற்றைப் பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், மீன்பிடி தளங்களை விடுபடாமல் பதிவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
 அதேபோல, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அனைத்தும் முழுமையாக சரியான முறையில் செலவிடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.  அதேபோல மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தொழில்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, எரிசக்தித் துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் கீழ் பொது மற்றும் சமூக பிரிவுத் தணிக்கை, பொருளாதாரம் மற்றும் வருவாய் பிரிவுத் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
 மேற்குறிப்பிட்டுள்ள ஆய்வு மற்றும் தணிக்கை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹென்சி லீமா அமலினி, பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், கூடுதல் செயலாளர் லி.சு.வசந்திமலர், துணைச் செயலாளர் பி.தேன்மொழி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவராணி உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து