முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியின் புதிய கட்டிட கட்டுமான பணிகள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர் - விருதுநகர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 5.20 கோடி மதிப்பீட்டில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிய கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவைர்  .சிவஞானம், தலைமையில்,   பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி   பூமி பூஜை   செய்து துவக்கி வைத்தார்கள்.
 விருதுநகர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி 2005ம் ஆண்டு முதல் 50 மாணவிகளுடன் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது 300 மாணவிகள் பயிலும் வகையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசால் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு 520.30 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. புதிய கட்டடிடம் 23,842 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. இக்கட்டிடத்தில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கணிணி ஆய்வகம், ஒளி மற்றும் ஒலி அரங்கம், நூலகம், பல்நோக்கு அரங்கம், அலுவலர் அறைகள் போன்ற அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.
 மேலும் வருடத்திற்கு 100 மாணவிகள் அரசு  செவிலியர் பயிற்சி பள்ளியில் பயிற்சிக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பிற கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் சென்று பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக ரூ.40 இலட்சம் மதிப்பில் ஒரு பேருந்தும்  தமிழ்நாடு முதலமைச்சர்  வழங்கப்பட்டுள்ளது. செவிலியர் பயிற்சி பள்ளியில் மாணவிகள் தங்கி பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடந்த  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.5.20 கோடி மதிப்பில் செவிலியர் மாணவியர் விடுதியை திறந்து வைத்தார்கள். கட்டுமானப் பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டு முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளை  பால்வளத்துறை அமைச்சர்  அறிவுறுத்தினார்கள்.
 இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  மு.சந்திரபிரபா, இணை இயக்குநர்(நலப்பணிகள் மற்றும் குடும்பநலம்)  .ஆர்.மனோகரன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர்  .மரு.துரைராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(மருத்துவமணிகள்) திரு.தி.புவனேஸ்வரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள்(மருத்துவமணிகள்)  .சி.ஜெய்துரை,  எம்.வேல்முருகன், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர்  .கே.சற்குணம் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து