முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் மே 19,20 ல் மலர்கண்காட்சி மற்றும் கோடை விழா

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்- - கொடைக்கானலில் வரும் மே மாதத்தில் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்கள் மலர் கண்காட்சி விழா நடைபெறுகின்றது.
 மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி விழா நடத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் கொடைக்கானல் நகராட்சி அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் சுற்றுலா அலுவலர் வரவேற்றார். கொடைக்கானல் ஆர்.டி.ஓ. மோகன், டி.எப்.ஓ. முருகன், கொடைக்கானல் நகராட்சி கமிசனர் முருகேசன், கொடைக்கானல் போலீஸ் டி.எஸ்.பி. பொன்னுச்சாமி, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பட்டுராஜன், மகேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் கூறியதாவது:- கொடைக்கானலில் வரும் மே மாதம் 19 மற்றும் 20 ஆகிய இரு நாட்கள் மலர்கண்காட்சி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஊட்டி மலர் கண்காட்சிக்கு பின்னர்தான் கொடைக்கானல் மலர் கண்காட்சி நடத்தப்படும். 19 ம் தேதி மலர் கண்காட்சி விழாவுடன் கோடை விழாவும் தொடங்கும். மலர் கண்காட்சி விழா இரண்டு நாட்கள் நடைபெறும். இதை அடுத்து 19 ம் தேதி துவக்கப்படும் கோடை விழா 10 தினங்கள் நடைபெறும், இதில் பல விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும், நாய் கண்காட்சிகள், மீன் பிடிக்கும் போட்டி, படகுப் போட்டிகள், வாத்து பிடிக்கும் போட்டி, உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும், கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்காக கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் சுற்றுலா தகவல் மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். இந்த மையத்தில் சுற்றுலா பயணிகள் தங்களது குறைகளை பதிவு செய்யலாம். இதற்காக ஒரு தொலை பேசி இணைப்பும் இந்த மையத்திற்கு வழங்கப்படும். கொடைக்கானல் நகர் பகுதி முழுதும் ஒரு வழிப்பாதையாக ஆக்கப்படும், சுற்றுலா பயணிகளும் உள்ளுர் வாசிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கழிப்பிட வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும். வகன நெரிசல்கள் தவிற்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பாரா கிளைடிங், கயிறு ஏறுதல் உள்ளிட்ட பல சாகச விளையாட்டுகள் நடத்த ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றது. சுற்றுலா பயணிகளுக்காக தகவல் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும், இது போல தகவல் பலகைகள், வழிகாட்டி பதாகைகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து