முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் வருடந்தோறும் 650 பேர் உயிரிழந்து வருகின்றனர் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் தகவல்

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் மாவட்டத்தில் வருடந்தோறும் சாலை விபத்துக்களில் 650 பேர் உயிரிழந்து வருகின்றனர் என்று சாலை பாதுகாப்பு வாரவிழாவில் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் தெரிவித்தார்.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சாலை பாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் தலைமை வகித்து பேசியதாவது
மாணவர்கள் அனைவரும் தலைக்கவசம் அணிவதை உறுதியாக கடைபிடிக்க வேண்டும். தமிழகத்திலேயே விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் வருடந்தோறும் சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் அதிகம் நடந்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் சராசரியாக வருடந்தோறும் 650 பேர் உயிரிழந்து வருகின்றனர். இதனை வெகுவாக குறைக்கும் முயற்சியில் மாவட்ட போக்குவரத்து காவல்துறை ஈடுபட்டு வருகிறது.  மாணவர்கள் தாங்கள் ஹெல்மெட் அணிவதை கண்டிப்பாக கடைபிடிப்பதுடன் தங்கள் குடும்பத்தினரையும் இந்த பழக்கத்தை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து