முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் அக்னிசட்டியுடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம்,- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் செந்துறை அருகே சொறிப்பாறைப்பட்டி,சங்கரன்பாறை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 22&ந்தேதி அம்மனுக்கு பூத்தட்டு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. 23&ந்தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. 27&ந்தேதி அம்மன் தேர் பவனி நடந்தது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம்,தீபாராதனைகள் நடந்ததை தொடர்ந்து அதிர்வேட்டு வாணவேடிக்கையுடன் நகர்வலம் வந்தது. அப்போது  பக்தர்கள் ஆங்காங்கேஅம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.மாவிளக்கு,முளைப்பாரி எடுத்து வந்தனர்.அன்று இரவு கரகாட்டம் நடந்தது.29&ந்தேதி நேற்று பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர்.பக்தர்கள் பால்குடம்,காவடி எடுத்தும்,முடி காணிக்கை கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.காப்பு கட்டி விரதமிருந்துவந்த ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்து பயபக்தியுடன் பூக்குழி இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.இதில் பக்தர்கள் குழந்தைகளை சுமந்தும்,அம்மன் வேடமனிந்தும் பூக்குழி இறங்கினர்.இதனைத் தொடர்ந்து படகளம் நடந்தது.இன்று 29&ந்தேதி மஞ்சள் நீராடுதல்,கம்பம் எடுத்தல்,கிராமதெய்வத்திற்கு கச்சை மாறுதல் மற்றும் சங்கரம்பாறைக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 30&ந்தேதி நாளை திங்கட்கிழமை காலையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் மற்றும் கேலரி அமைத்து பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது.இதில் 300 மாடுபிடி வீரர்களும்,600&க்கும் மேற்பட்ட  காளைகள் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு நாளும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சொறிப்பாறைபட்டி,சங்கரன்பாறை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து