முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில்ரா மநாதபுரம் கல்வியியல் கல்லூரியில் ரத்ததான முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்-ராமநாதபுரம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ராமநாதபுரம் சி.எஸ்.ஐ.கல்வியியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக  ராமநாதபுரம் சி. எஸ். ஐ.  கல்வியியல் கல்லூரியில்  ரத்த தான முகாம்  நடைபெற்றது. முதல்வர் முனைவர் கே. டோலாரோஸ் மேரி வரவேற்றார். சி‌எஸ்‌ஐ மதுரை-முகவை பேராய சட்ட ஆலோசகரும் கல்லூரியின் தாளாளருமான  டாக்டர் தேவ மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வி. ராஜேந்திரன் ரத்த தானத்தின் அவசியத்தினை வலியுறுத்தி சிறப்புரையாற்றி  ரத்த தான முகாமினை துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர். விஜயகுமார், கல்லூரி துணை முதல்வர் ஏ. ஆனந்த்  ரெட் கிராஸ் பொருளாளர் சி. குணசேகரன், மற்றும் யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வள்ளி விநாயகம் ஆகியோர் ரத்த தானம் செய்பவர்களை பாராட்டி பேசினர்.
     ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அதிகாரி டாக்டர் கே. எஸ். விநாயக மூர்த்தி தலைமையிலான குழுவினர் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் மாணவிகளிடமும் ஏஆர்.டி தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள்  மற்றும் தன்னார்வ ரத்த கொடையாளர்களிடமும் 35 யூனிட் ரத்தம் சேகரித்தனர். 65 வது முறை ரத்த தானம் கொடுப்பதற்காக ஆர்வமுடன் கலந்து கொண்ட கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கில பேராசிரியர் எஸ். மோகன முருகன் முதலாவதாக ரத்த தானம் கொடுத்து முகாமினை ஆரம்பித்தார். யூத் ரெட் கிராஸ் மாணவ ஒருங்கிணைப்பாளர் கே. சசிக்குமார் முடிவில் நன்றிகூறினார் முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட ரெட் கிராஸ் ரத்ததான ஒருங்கிணைப்பாளர் எஸ். அய்யப்பன், மற்றும் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து