முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டன்சத்திரம் அருகே வாரிசு சான்றிதழ் கொடுக்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது

திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்.-ஒட்டன்சத்திரம் அருகே வாரிசு சான்றிதழ் கொடுக்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.  
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கந்தமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்  இந்திரன் (45) இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தந்தை சின்னச்சாமித் தேவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதற்கான வாரிசுழ் கோரி கோட்டாட்சியரிடம் மனுச் செய்திருந்தார். அவரது மனுவை பரிசீலணை செய்த கோட்டாட்சியர் வாரிசு சான்று பெற்றுக்ககொள்ள உத்தரவிட்டார். இது சம்மந்தமாக கிராம நிர்வாக அலுவலரிம் சான்று பெற்று, மூலச்சத்திரத்தைச் சேர்ந்த பெண் வருவாய் ஆய்வாளர் குப்பாத்தாளிடம் சான்றிதழில் கையொப்பம் வேண்டி கொடுத்திருந்தார். வருவாய் ஆய்வாளர் குப்பாத்தாள் லஞ்சம் பெறுவதற்காக சான்றிதழ் கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்துள்ளார். இது சம்மந்தமாக இந்திரன் வருவாய் ஆய்வாளரிடம் கேட்டபோது ரூ.7 ஆயிரம் கொடுத்தால் தான் வாரிசு சான்று பெற முடியும் இல்லையென்றால் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளார். பணம் கேட்டு இந்திரனிடம் வருவாய் ஆய்வாளர் குப்பாத்தாள் போனில் தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆத்திரமடைந்த திண்டுக்கல்லில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசணையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் ரூ.7 ஆயிரத்தைக் கொடுத்து வருவாய் ஆய்வாளரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளனர். நேற்று மதியம் சுமார் 12.00 மணியளவில் இந்திரன் லஞ்சப்பணம் ரூ.7 ஆயிரத்தைக் கொடுக்கும் போது மாறுவேடத்திலிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் குப்பாத்தாளை லஞ்ச ஒழிப்பு வழக்கில் கைது செய்து, திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கைது செய்யப்பட்ட வருவாய் ஆய்வாளர் குப்பாத்தாள் தொப்பம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த கரையூரைச் சேர்ந்தவர் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து