முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாடிப்பட்டி அருகே கல்குவாரியில்மண்சரிந்து 3பேர்பலி

செவ்வாய்க்கிழமை, 1 மே 2018      மதுரை
Image Unavailable

 வாடிப்பட்டி - வாடிப்பட்டி அருகே கல்குவாரியில் மண்சரிந்து 3தொழிலாளிகள் பலியானார்கள் அதில் ஒருவர்உயிருக்கு ஆபத்தானநிலையில்சிகிச்சைபெற்றுவருகிறார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டியில் மதுரையைசேர்ந்த ரமேஷ்என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் நேற்று காலை 8மணிக்கு 7பேர்வேலைசெய்தனர். சுமார் 60அடிஉயரத்திலிருந்து சரிவானபகுதியில் அடுத்தடுத்து வரிசையாக நின்று கற்களை உடைத்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மேல்பகுதியில் உள்ள மண் சரிந்தது. இதில் இடுபாடுகளில் 4 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். உடனே அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டனர். இதில் குலசேகரன்கோட்டையை சேர்ந்த பரமசிவம்(வயது 45)என்பவர் மூச்சுதினறி சம்பவஇடத்தில் இறந்தார். பூச்சம்பட்டியை சேர்ந்த நாகராஜ்(54), கிருஷ்ணன்(45)ஆகியோர் வாடிப்பட்டி அரசுமருத்துவமணையில் சிகிச்சைபலனின்றி இறந்தனர். மேலும் பூச்சம்பட்டியை சேர்ந்த சீனிவாசன்(48) உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை   அரசுமருத்துவமணைக்கு அனுப்பி
வைக்கப்பட்டார். இந்நிலையில் பூச்சம்பட்டி கிராமபொதுமக்கள் திரண்டுவந்து பூச்சம்பட்டிகிராமத்தில் உள்ள கல்குவாரிகளை நிரந்தரமாகமூடவேண்டும் என்றும் மதுரைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பியுள்ள சீனிவாசனுக்கு தனியார் மருத்துவமணை சிகிச்சையளிக்க வேண்டும் என்றுகோரிக்கைவிடுத்து வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு சாலைமறியல்போராட்டம் செய்தனர். தகவலறிந்த மாவட்ட வருவாய்அலுவலர்(டி.ஆர்.ஓ.,)குணாளன், தாசில்தார் பார்த்தீபன், மாணிக்கம் எம்.எல்.ஏ., சமயநல்லுhர் போலீஸ்துணை சூப்பிரண்டு மோகன்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரெஜினா,பாலாஜி,கிரேசிசோபியாபாய்,முத்துபாண்டி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாணிக்கம் எம்.எல்.ஏ., தனியார் மருத்துவமணையில் சிகிச்சைக்கான கட்டணத்தை தான் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவதாக உறுதியளித்ததன்பேரில் மறியல்போராட்டம் செய்தவர்கள் கலைந்துசென்றனர். தகவலறிந்த அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மாவட்டக்கலெக்டர் வீராராகவராவ் ஆகியோர் வாடிப்பட்டிஅரசுமருத்துவமணைக்கு நேரில் வந்து இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலிசெலுத்தி அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல்கூறினர்.   இந்த சம்பவத்தால் வாடிப்பட்டிபகுதிசோகத்தில் மூழ்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து