முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

125 புள்ளிகளுடன் ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதல் இடம்

செவ்வாய்க்கிழமை, 1 மே 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய்: ஐசிசி-யின் வருடாந்திர அப்டேட் முடிவில் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து கம்பீரமாக முதல் இடத்தில் நீடிக்கிறது.

10 டெஸ்டில் வெற்றி
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 2014-15 சீசனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 0-2 என இழந்தது. இதற்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 1-3 என தொடரை இழந்தது.அதன்பின் இந்திய டெஸ்ட் அணிக்கு வசந்த காலம்தான். 2016-17 சீசனில் 13 டெஸ்டில் 10 டெஸ்டில் வெற்றி வாகைச் சூடியது.

முதல் இடத்தில் ...
இறுதியாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-2 எனத் தொடரை இழந்தது. என்றாலும் ஐசிசி-யின் கட்ஆஃப் தேதிக்குள் இந்தியா முதல் இடத்தில் நீடித்தது. இதனால் ஐசிசியின் விருதை பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் இறுதியில் ஆண்டு இறுதி அப்டேட்டை வெளியிடும்.

125 புள்ளிகள் ...
இதில் இந்தியா 125 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. 2-வது இடத்தில் இருந்து தென்ஆப்பிரிக்கா ஐந்து புள்ளிகள் இழந்து 112 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் 13 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. ஆஸ்திரேலியா நான்கு புள்ளிகள் அதிகம் பெற்று 106 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து 4-வது இடத்தையும், இங்கிலாந்து ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து