முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த வரிசையில் ஆடினாலும் அம்பதி ராயுடு ரன் குவிப்பார் சி.எஸ்.கே கேப்டன் டோனி புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 1 மே 2018      விளையாட்டு
Image Unavailable

புனே: டு பிளிசிஸால் பின்னால் களம் இறங்கிய அம்பதி ராயுடு 24 பந்தில் 41 ரன்கள் குவித்ததால் டோனி புகழாரம் சூட்டியுள்ளார்.

அம்பதி 41 ரன்...
புனேயில் நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்தது. வாட்சன் 40 பந்தில் 78 ரன்னும் (4 பவுண்டரி, 7 சிக்சர்), கேப்டன் டோனி 22 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), அம்பதி ராயுடு 24 பந்தில் 41 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அமித் மிஸ்ரா, விஜய் சங்கர், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

சென்னை வெற்றி
பின்னர் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு198 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரி‌ஷப் பந்த் 45 பந்தில் 79 ரன்னும் (7 பவுண்டரி, 4 சிக்சர்), விஜய் சங்கர் 31 பந்தில் 54 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். ஆசிப் 2 விக்கெட்டும், நிகிடி, ஜடேஜா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். சென்னை அணி பெற்ற 6-வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

ரன்களை குவிப்பார்
டு பிளிசிஸ் தொடக்க வீரராக களம் இறங்கியதால் அம்பதி ராயுடு மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க வேண்டியிருந்தது. வெற்றிக்குப் பின் இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-
எங்கள் அணியின் பேட்டிங் நன்றாக இருந்தது. அணியின் ரன் குவிப்புக்கு பார்ட்னர்ஷிப் முக்கியமானது. டு பிளிசிஸ் தொடக்க வீராக களம் இறக்கப்பட்டதால் அம்பதி ராயடு மிடில் ஆர்டரில் (4-வது வீரர்) விளையாடினார். எந்த வரிசையில் ஆடினாலும் அவர் ரன்களை குவிப்பார். அவரால் மிடில் ஆர்டர் மேலும் நிலைத்தன்மை ஏற்பட்டது. எனவே நாங்கள் எடுத்த முடிவு சிறந்ததே.

மோசமாக இருந்தது
தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீரர் நிகிடி கவரும் வகையில் பந்து வீசினார். பந்துகளை பவுன்சராக போட அவரது உயரம் காரணமாக இருந்தது. எங்களது கடைசி கட்ட பந்து வீச்சு (டெத்ஒவர்ஸ்) மோசமாக இருந்தது. பந்து வீச்சு நன்றாக அமையவில்லை. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் சிறிய ஆடுகளத்தில் இது மாதிரியான பிழைகள் சிறியதாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 9-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வருகிற நாளை ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து