முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தான் டெஸ்டா, கவுன்டி கிரிக்கெட்டா: விராட் கோலிதான் முடிவு செய்வார் - வினோத் ராய்

வியாழக்கிழமை, 3 மே 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவதா அல்லது கவுன்டி கிரிக்கெட்டில் பங்கேற்பதா என்பதை விராட் கோலிதான் முடிவு செய்வார் என வினோத் ராய் கூறியுள்ளார்.

இங்கிலாந்து பயணம்

ஐ.பி.எல் தொடர் முடிந்த உடன் இந்தியா முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் உடன் ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்பின் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையடுவதற்காக இங்கிலாந்து செல்கிறது.

கவுன்டி கிரிக்கெட்டில்...

கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்து செல்லும்போது விராட் கோலி மிகவும் மோசமாக விளையாடினார். இதனால் இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட விராட் கோலி முடிவு செய்துள்ளார். ஆப்கானிஸ்தான் உடன் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் இந்தியா முன்னணி வீரர்களுடன் களம் இறங்க வேண்டும். விராட் கோலி இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பேச்சுக்கே இடமில்லை

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகக்குழுவில் தலைவர் வினோத் ராய், விராட் கோலி ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவதா, கவுன்டி போட்டியில் விளையாடுவதா என்பதை அவர்தான முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ‘‘டெஸ்ட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நிர்வாகக்குழு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இங்கிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக கவுன்டி போட்டியில் வீரர்கள் விளையாட உள்ளனர். ஆப்கானிஸ்தான் டெஸ்டிற்காக அவர்களை நிறுத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

கோலிக்கு எதிராக அல்ல

ஆப்கானிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக விளையாடுகிறது. விராட் கோலிக்கு எதிராக அல்ல. ஆப்கானிஸ்தான் போட்டிக்காக கவுன்டி போட்டியில் விளையாடும் வீரர்கள் திரும்ப அழைக்கப்படமாட்டார்கள். இங்கிலாந்து தொடருக்குத்தான் முக்கியத்துவம். அங்கே சிறப்பாக விளையாட இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட நிலைமைக்கு காரணமாக அதே தவறு மீண்டும் நிகழ்ந்துவிடக் கூடாது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து