முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராம சுயாட்சி இயக்க திட்ட பணிகள்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 4 மே 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்,- கிராம சுயாட்சி இயக்கம்  திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும்  விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது குறித்தும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. இராஜேந்திரபாலாஜி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்த ஆய்வுக்கூட்டம் அமைச்சகத்தின்   கூடுதல்   செயலாளர்   பிரவீன்குமார், தமிழ்நாடு    கைத்தறித்    தொழில்கள்     வளர்ச்சி   கழகத்தின்   தலைவர்   மற்றும்   மேலாண்மை   இயக்குநர் டாக்டர்.சந்தோஷ் பாபு, விருதுநகர் கலெக்டர் சிவஞானம், மத்திய அரசின் சார்பு செயலாளர் கணேஷ்குமார் ஆகியோர்  முன்னிலையில் நடந்தது.
இதில் விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது தொடர்பாக கல்வி, சுகாதாரம், ஊட்டசத்து, வேளாண்மை, குழந்தைகள் வளர்ச்சி, வங்கி கணக்கு தொடங்குதல் மற்றும் கடன் வழங்குதல், அடிப்படை வசதிகள், திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்தும் ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும்  அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேட்டறிந்தார்.
இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்ததாவது,
விருதுநகர் மாட்டத்தில் 36 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலவசமாக எரிவாயு இணைப்புகள், கிராமப்புற மக்களுக்கு எல்.இ.டி பல்புகள் 50 சதவிதித மான்யத்திலும், கிராமப்புற மக்களுக்கு பூஜ்ய இருப்புத்தொகை கொண்ட வங்கி கணக்கு தொடங்கிடவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், உள்ளிட்ட பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார்,மாவட்ட ஊரக வளரச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து