முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றியால் 5-வது இடத்திற்கு முன்னேறிய மும்பை

சனிக்கிழமை, 5 மே 2018      விளையாட்டு
Image Unavailable

இந்தூர்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான வெற்றியின் மூலம் கடைசி இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்.

வெற்றி நெருக்கடி...
ஐ.பி.எல். தொடரின் 34-வது ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் 8 போட்டிகளில் முடிவில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் இருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளே-ஆஃப்ஸ் சுற்று குறித்து நினைத்து பார்க்க முடியும் என்பதால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

5 போட்டியில் வெற்றி...
முதலில் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 174 ரன்கள் எடுத்தது. பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 176 எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் மூன்று வெற்றிகளுடன் கடைசி இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்னும் ஐந்து போட்டிகள் மீதமுள்ளது. ஐந்திலும் வெற்றி பெற்றால்தான் நடப்பு சாம்பியன் பிளே-ஆஃப்ஸ் சுற்றை எதிர்பார்க்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து