முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருள்மிகு கௌமாரியம்மன் சித்திரை பெருந் திழாவில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சி

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      தேனி
Image Unavailable

தேனி,-தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு கௌமாரியம்மன் சித்திரை பெருந் ிழாவில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்; அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை   மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்,  ; திறந்து வைத்து பார்வையிட்டார்.
தமிழக அரசின் சார்பில் தேனி மாவட்டத்தில் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன்  ்கோயில் சித்திரை பெருந் ிழா 08.05.2018 இன்று முதல் 15.05.2018 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். இவ்விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சியில் அரசின் வளர்ச்சித்திட்டப்பணிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாவட்டத்தில் நடைபெற்ற அரசின் முக்கிய நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை ஒருங்கிணைத்து பொதுமக்கள் அறிந்து தெரிந்து கொள்வதற்காக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இக்கண்காட்சியினை இலட்சக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு கண்டுகளித்தனர். பொதுமக்கள்; தெரிவிக்கையில், இக்கண்காட்சி செய்தி மக்கள் தொடர்புத்துறையின்  சார்பில், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை எளிதான முறையில் அறிந்து தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது எனத்தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் செல்வி கவிதா  வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர்  செந்தில் குமார்  வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன்  ்கோயில் செயல் அலுவலர்  பாலகிருஷ்ணன்  உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)  அ.கொ.நாகராஜபூபதி  உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்)  அ.இளையேந்திரன்   உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து