முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர்களை கவர்ந்த ஏர்டெல் விளம்பரம்

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      வர்த்தகம்
Image Unavailable

ஐபிஎல் தொடரில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சமீபத்தில் நடந்தது. ஆட்டம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திராத நிலையில், ஏர்டெல் நிறுவனம் மைதானத்தில் செய்திருந்த விளம்பரம் அங்கிருந்தவர்கள் மட்டுமின்றி அனைவரையும் ஈர்த்துள்ளது. சில டிஷர்ட்டுகள்தான் விளம்பரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மைதானத்தில் அங்கங்கு சில நாற்காலிகளில் சிவப்பு நிற டிஷர்ட்டுகள் போடப்பட்டிருந்தன. அதில், “டிராப்பிக்கில் மாட்டிக்கொண்டீர்களா? இந்த போட்டியை லைவாக காணுங்கள்” என ஏர்டெல் விளம்பரம் செய்திருந்தது. ஐபிஎல் போட்டியை ஏர்டெல் நேரடியாக ஒளிபரப்பு செய்வதால், இந்த மாறுபட்ட விளம்பர யுக்தியை அந்நிறுவனம் கையாண்டுள்ளது.

மேலும், “ஆபிஸில் இன்னும் இருக்கிறீர்களா? இந்த போட்டியை லைவாக காணுங்கள்”, “இங்கே உட்கார முடியாது”, “நான் ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என பல்வேறு வாசகங்கள் கொண்ட டிஷர்ட்டுகள் அங்கங்கு சீட்டுகளின் மேல் போடப்பட்டிருந்தன.  மைதானத்தில் உள்ளவர்கள் இதனை புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய, நெட்டிசன்கள் வைரலாக பரப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து