முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லாபம் சரிவு

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      வர்த்தகம்
Image Unavailable

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 50 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது. வங்கியின் நிகர லாபம் ரூ.1,020 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.2,024 கோடியாக இருந்தது.

வாராக் கடனுக்கான ஒதுக்கீடு அதிகரித்ததால் வங்கியின் லாபம் பாதியாகக் குறைந்துள்ளது. வங்கியின் வாராக் கடன் அளவு 17 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதால் ஒதுக்கீடும் 85 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.வாராக் கடனுக்கான ஒதுக்கீடு ரூ.6,625 கோடியாகும். டிசம்பர் 2017 காலாண்டில் ஒதுக்கிய தொகை ரூ. 3,570 கோடியாகும். இதேபோல டிசம்பர் காலாண்டில் 7.82 சதவீதமாக இருந்த நிகர வாராக் கடன் அளவு தற்போது 8.84 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து