ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - கேப்டனாக ரகானே நியமனம்

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      விளையாட்டு
indian cricket team 2018 5 8

மும்பை : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூருவில்...

ஆப்கானிஸ்தான் அணி கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிற்கு அதிக அளவில் ஆதரவு அளித்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம், வரலாற்று சிறப்புமிக்க ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் என முடிவு செய்தது. இதுகுறித்து ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிசிசிஐ அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பெங்களூரு எம் சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறும் என அறிவித்தது.


கோலிக்கு ஓய்வு...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்டில் விளையாடும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது, கவுன்டி போட்டியில் விளையாட விராட் கோலி விரும்பியதால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ரகானே கேப்டனான நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் முன்னணி வீரர்களும் இந்த டெஸ்டில் விளையாடுகிறார்கள்.

ரகானே கேப்டன்

ஆப்கானிஸ்தான் டெஸ்டிற்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரகானே (கேப்டன்), 2. தவான், 3. முரளி விஜய், 4. லோகேஷ் ராகுல், 5. புஜாரா, 6. கருண் நாயர், 7. சகா (விக்கெட் கீப்பர்), 8. அஸ்வின், 9. ஜடேஜா, 10. குல்தீப் யாதவ், 11. உமேஷ் யாதவ், 12. முகமது ஷமி, 13. ஹர்திக் பாண்டியா, 14. இசாந்த் சர்மா, 15. சர்துல் தாகூர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து