முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி மற்றும் 3 நாடுகள் டி-20 ஓவர் போட்டிக்கான முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட ஆஸ்திரேலியய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் ஒருநாள் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்மித் - வார்னருக்கு தடை

ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்டின்போது ஆஸ்திரேலியா வீரர் பான்கிராப்ட் பந்து சேதப்படுத்தியது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடைவிதித்தது. இதனால் வார்னர் மற்றும் ஸ்மித் அணியில் இருந்து விலகி இருக்கிறார்கள்.

டிம் பெய்ன் கேப்டன்

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஆஸ்திரேலியா அணி முதன்முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பரான டிம் பெய்ன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிரடி பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா கல்ந்து கொள்ளும் 3 நாடுகளுக்கான  20 ஓவர் போட்டிக்கான அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.  கேப்டனாக ஆரோன் பிஞ்ச்  நியமிக்கப்ப்பட்டு உள்ளார்.

ஒருநாள் ஆஸி. வீரர்கள்:-

1. டிம் பெய்ன் ( கேப்டன்),  2. ஆரோன் பிஞ்ச் (துணைக் கேப்டன்), 3. அஷ்டோன் அகர், 4. அலெக்ஸ் கேரி, 5. ஜோஷ் ஹசில்வுட், 6. டிராவிஸ்ட் ஹெட், 7. நாதன் லயன், 8. மேக்ஸ்வெல், 9. ஷான் மார்ஷ், 10. ரிச்சார்ட்சன், 11. கேன் ரிச்சார்ட்சன், 12. ஆர்கி ஷார்ட், 13. பில்லி ஸ்டேன்லேக், 14. மார்கஸ் டாய்னிஸ், 15. அன்ட்ரிவ் டை.

டி-20 போட்டிக்கான வீரர்கள்:

ஆரோன் பிஞ்ச் ( கேப்டன்), அலெக்ஸ் கேரி (துணைக் கேப்டன்), அஷ்டோன் அகர்,  டிராவிஸ்ட் ஹெட், நிக் மட்டின்சன், கிளன்மேக்ஸ்வெல், ஜெயி ரிச்சார்ட்சன், கேனொ ரிச்சார்ட்சன், ஆர்கி ஷார்ட்,  பில்லி ஸ்டேன்லேக், மார்கஸ் டாய்னிஸ்,, மிட்சல் சுவப்சன், அன்ட்ரிவ் டை, ஜேக் வைல்டர்முத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து