முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென், வட தமிழக உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழக்கிழமை, 10 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்யும் என்றும், கோடை மழை காரணமாக வெயிலின் அளவு இயல்பை விடக் குறையக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இயல்பை விட கோடை மழை அதிக அளவில் பெய்துள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மே 10-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான கோடை மழையின் அளவு 93 மில்லி மீட்டர். இதே காலக்கட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழையின் அளவு 81 மில்லி மீட்டர். எனவே இந்த ஆண்டு கோடை மழை இயல்வை விட அதிகமாகப் பெய்துள்ளது.

கடந்த சில நாட்களாக தென்னிந்திய பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்ப அளவானது குறிப்பிடத்தக்க அளவில் உயராமல் தவிர்க்கப்பட்டுள்ளது. கோடைக் காலத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 11 செ.மீ. மழையும், வால்பாறையில் 10 செ.மீ. மழையும் பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அதே போல கோடை மழை காரணமாக வெப்ப அளவானது இயல்பான அளவை விட குறையும் என்றும் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து