இந்தி நடிகை கொலை வழக்கில் 2 துணை நடிகர்கள் குற்றவாளிகள் - மும்பை நீதிமன்றம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 10 மே 2018      சினிமா
meenakshi-thapa 2018 5 10

மும்பை : இந்தி நடிகை மீனாட்சி தாபா கடந்த 2012-ம் ஆண்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் துணை நடிகர்கள் 2 பேரை குற்றவாளிகளாக மும்பையில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஹீரோயின் பட நாயகியான மீனாட்சி தாபாவை, துணை நடிகர்களான அமித் ஜெய்ஷ்வால், அவரது தோழி ப்ரீத்தி சுரின் ஆகியோர் மும்பையில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து அவரை 2 பேரும் கடத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து, மீனாட்சி தாபாவின் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க 2 பேரும் திட்டமிட்டனர். ஆனால், மீனாட்சி தாபாவின் குடும்பத்தினரால் பணம் தர முடியாது என்பதை அறிந்து கொண்டதும், அவரை கொடூரமாக கொலை செய்தனர்.

மீனாட்சி தாபாவின் ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி, பணம் எடுத்தபோது, அதை வைத்து 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்ததையடுத்து, மும்பையில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டது. அப்போது அமித் ஜெய்ஷ்வால், அவரது தோழி ப்ரீத்தி சுரின் ஆகியோரை குற்றவாளிகளாக நீதிபதி அறிவித்தார்.

COCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து

Funny Golden Retriver demanding to pat repeatedly and she loves it!!

கட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்

கண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்

அழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

வீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil

Racing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து