முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகனை கொன்று புதைத்த எழுத்தாளர் உட்பட 2 பேர் சிறையில் அடைப்பு

வியாழக்கிழமை, 10 மே 2018      மதுரை
Image Unavailable

 மதுரை -  மதுரை டோக் நகரை சேர்ந்த சௌபா என்ற சௌந்திரபாண்டியன் ( வயது 55 ) . இவர் சிவலப்பேரிப்பாண்டி படத்திற்கு கதை வசனம் எழுதியவர் . இவரது மனைவி லதா பூரணம் ( வயது 50 ) . இவர் கோவில்பட்டி அரசு கலை கல்லூரியில் முதல்வராக உள்ளார் . இருவரும் கடந்த 14 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர் . இதனால் சௌபா 2 வது திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது . இவருடைய மகன் விபின் ( வயது 27 ) . முதுநிலை பட்டதாரி . இவர் தனது தந்தை சௌபாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது . இந்நிலையில் சௌபா மகன் விபின் கடந்த 30ம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது தாய் பூரணம் போலீசில் புகார் கொடுத்துள்ளார் . போலீசார் வழக்கு பதிவு செய்து சௌபாவிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார் . பின்னர் போலீசார் அவரை கண்காணித்து துப்பு துலங்கியதில் சௌபா தன் மகனை பணம் கேட்டு வாக்கு வாதம் செய்த போது இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது மகன் விபின் இறந்துள்ளது தெரியவந்துள்ளது . பின்னர் போலீசார் சௌபாவை விசாரித்ததில் தனது மகனை கொன்றது ஒப்புக்கொண்டுள்ளார் . பின்னர் அவர் கொடுத்த வாக்கு மூலத்தில் தனது மகன் போதைக்கு அடிமையாகி  தன்னிடம் பணம் கேட்டு தொந்தரவு அளித்த தாகவும் அதன் பேரில் நடந்த சண்டையில் அவரை தான் தாக்கியதில் இறந்ததாக கூறியுள்ளார் . இறந்து போன அவரது மகனை கொடை ரோடு அருகில் உள்ள அவரது தோட்டத்தில் புதைத்ததாக தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக போலீசார் சௌபா மற்றும் அவரது கூட்டாளிகள் பூமி ( வயது 40 ) , கணேசன் ( வயது 42 ) ஆகிய மூவரையும் கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தியுள்ளனர் . இவர்களை 24ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு விடப்பட்டதை தொடர்ந்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து