மாட்ரிட் ஓபன்: காலிறுதியில் ஷரபோவா

வியாழக்கிழமை, 10 மே 2018      விளையாட்டு
sharapova 2015 5 20

பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டாக கருதப்படும் ஓபன்களில ஒன்றான மாட்ரி, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா பிரான்சின் கிரிஸ்டினா மிலாடெனோவிக்கை எதிர்கொண்டார். இதில் மரியா ஷரபோவா 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இவருடன் கிவிடோவா, சுவாரஸ் நவோரா, கார்சியா, பிளிஸ்கோவா, பெர்ட்டென்ஸ், ஹாலெப், கசட்கினா ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினார்கள். காலிறுதியில் ஷரபோவா பெர்ட்டென்ஸை எதிர்கொள்கிறார். ஷரபோவா தடைக்காலம் முடிந்து மீண்டும் களமிறங்கும்போது விமர்சனம் செய்தவர் கிரிஸ்டினா மிலாடெனோவிக். ஷரபோவாவின் முதல் தொடரான ஸ்டட்கார்ட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஷரபோவாவை தோற்கடித்திருந்தார். தற்போது அதற்கு பழிதீர்த்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து