முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை எழுத்தாளர் மகனை அடித்துக் கொன்ற புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி எடுத்து மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை

வெள்ளிக்கிழமை, 11 மே 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - குடிபோதையில் தொந்தரவு செய்த என்ஜினியரிங் வாலிபரை அடித்துக்கொன்ற மதுரை எழுத்தாளர் அடையாளம் காட்டிய இடத்தில் உடல் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
மதுரை டோக்நகர் எஸ்.பி.ஓ. தெரு 5வது சந்து பகுதியைச் சேர்ந்தவர் சௌபா என்ற சௌந்திரபாண்டியன்(55). இவர் திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியவர். தற்போது ஒரு தனியார் பத்திரிக்கையில் எழுத்தாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா ஞீரணம் கோவில்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் முதல்வராக பணிபுரிந்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் கடந்த 14 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது ஒரே மகன் விபின்(25). முதுநிலை பட்டதாரியான இவர் போதைக்கு அடிமையானவர். தந்தை, தாய் ஆகிய இருவரது வீட்டிலும் மாறி மாறி வசித்து வந்தார். கடந்த 30ம் தேதி முதல் தனது மகனை காணவில்லை என்று லதா ஞீரணம் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் சௌந்தரபாண்டியனிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் தான் விபினை அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரையும், அவருக்கு உடந்தையாகஇருந்த மேலும்இருவரையும் கைது செய்து மதுரை ஞிதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் ஒரு நாள் காவல் எடுத்து விசாரணை எடுத்த நிலையில் விபினை புதைத்த இடத்தை அடையாளம் காட்டுவதற்காக கொடைரோடு அருகிலுள்ள பள்ளபட்டிக்கு அழைத்து வந்தனர்.
பள்ளபட்டியில் சௌந்தரபாண்டியனுக்கு சொந்தமான தோட்டத்தில் தனது மகன் விபின் உடலை புதைத்ததாக வாக்குமூலத்தில் கூறியிருந்தார். அவருக்கு துணையாக பள்ளபட்டியைச் சேர்ந்த ஞீமி, நிலக்கோட்டையைச் சேர்ந்த கணேசன் ஆகியோரும் இருந்தனர். தாசில்தார் நிர்மலா கிரேஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த இடம் தோண்டப்பட்டது. பின்னர் மதுரையைச் சேர்ந்த மருத்துர்கள் விபினின் உடலை தோண்டியெடுத்தனர். அவரது உடல் பாகங்களை உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தந்தையே மகனை அடித்துக் கொன்றதும், அவரது உடல்தோண்டியெடுத்து விசாரணை நடத்தப்படும் சம்பவமும் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து