முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழநி முருகன் உற்சவர் சிலை மோசடி: ஐ.ஐ.டி குழு ஆய்வை துவக்கியது

சனிக்கிழமை, 12 மே 2018      தமிழகம்
Image Unavailable

பழநி: பழநி முருகன் கோயிலில் உள்ள உற்சவர் சிலையை செய்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக விசாரிக்கும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் முன்னிலையில் ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

பழநி முருகன் கோயிலில் உள்ள உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு என தொடரப்பட்ட வழக்கை, நீதிமன்ற உத்தரவின்படி, ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தொடங்கியுள்ளார். அவரது தலைமையிலான குழுவினர் நேற்று காலை பழநி முருகன் கோயிலில் உள்ள உற்சவர் சிலை குறித்த விசாரணையை துவக்கினர்.

பொன் மாணிக்கவேல் முன்னிலையில், சென்னை ஐ.ஐ.டி.யின் உலோகவியல் பேராசிரியர் முருகையன் தலைமையிலான குழு சிலையை ஆய்வு செய்தது.

பழநி முருகன் கோயிலுக்கு ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகன் உற்சவர் சிலை கடந்த 2004-ல் வைக்கப்பட்டு கருத்து விட்டதால் அகற்றப்பட்டது. சுமார் 14 ஆண்டுகள் இருட்டறையில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னால் ஆன முருகன் சிலையை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக தற்போது புகார் எழுந்தது. இதையடுத்து, நடந்த விசாரணையின் அடிப்படையில் ஸ்தபதி முத்தையா மற்றும் இணை ஆணையர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து