44-வது லீக் ஆட்டம்: 31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி

சனிக்கிழமை, 12 மே 2018      விளையாட்டு
kolkata 2018 05 12

இந்தூர்: ஐ.பி.எல். தொடரின் 44-வது லீக் ஆட்டத்தில்  31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா அபாரமாக வெற்றிப்பெற்றது. அஸ்வீன், ராகுல் அதிரடி வீணானது.

பந்துவீச்சு தேர்வு
11-வது சீசன் ஐ.பி.எல். போட்டித் தொடரின் 44-வது லீக் ஆட்டம் நேற்று 4 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது.

ராகுல் அதிரடி...
அதிரடியாக ஆடிய துவக்க வீரர் சுனில் நரேன் 36 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் குவித்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் விளாசினார். ஆண்ட்ரே ரசல் 3 இமாலய சிக்ஸர்களுடன் 31 ரன்கள் சேர்த்தார்.  இந்நிலையில், 246 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர் ராகுல் சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தினார். 29 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் குவித்தார். கேப்டன் அஸ்வின் 22 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் விளாசினார். ஆரோன் பிஞ்ச் 34 ரன்கள் சேர்த்தார். இருப்பினும் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து