முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க- ரஜினி கூட்டணிக்கு காலம்தான் பதில் சொல்லும் இல கணேசன் எம்.பி. பதில்

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018      தமிழகம்
Image Unavailable

கோவை:  நடிகர் ரஜினிகாந்த் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென்ற குருமூர்த்தி கருத்திற்கு காலம் தான் பதில் சொல்லும் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கர்நாடகா தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும். வாக்குபதிவிற்கு பின்னான கருத்து கணிப்புகள் அதை உறுதி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பது தமிழகத்திற்கு நன்மையளிக்கும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து வழிமொழிகிறேன். நாளை தாக்கல் செய்யவுள்ள காவிரி வரைவு திட்டம் தமிழகத்திற்கு நியாயமான முறையில் அமையும்.

ஆடிட்டர் குருமூர்த்தி பாஜக மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் நலவிரும்பி. ரஜினிகாந்த் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென்ற குருமூர்த்தி கருத்து குறித்த கேள்விக்கு, காலம் தான் பதில் சொல்லும். ஆனால் குருமூர்த்தியின் கருத்தில் மறுப்பதற்கு எதுவும் இல்லை.பெட்ரோல், டீசல் விலையினை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநில அரசுகள் உடன்பட்டால் விலை கட்டுக்குள் வரும். இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து