ஐ.பி.எல் போட்டியில் முதன்முதலில் தடம் பதித்த நேபாள வீரர் விக்கெட்டையும் கைப்பற்றி சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018      விளையாட்டு
nepal player 2018 05 13

வான்டூடே: நேபாளத்தைச் சேர்ந்த 17வயது இளம் வீரர் முதன் முதலில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று, விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

நேபாளத்தைச் சேர்ந்த 17வயது இளம்வீரர் சந்தீப் லாமிச்சானே. லெக் ஸ்பின்ரானா சந்தீப்பை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2018- ஐபிஎல் சீசனில் ஏலத்தில் எடுத்து இருந்தது. கடந்த 10 போட்டிகளாக வாய்ப்பைப்பெறாமல் அணியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுஇருந்த லேமிச்சானேவுக்கு நேற்றைய பெங்களூருராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

நேபாளத்தில் இருந்து ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் முதல் வீரரான லாமிச்சானே முத்திரை பதிக்கவும் தவறவில்லை. 4 ஓவர்கள் வீசிய லாமிச்சானே 25 ரன்கள் விட்டுக்கொடுத்து, பர்தீப் படேல் விக்கெட்டைவீழ்த்தினார்.

போட்டி முடிந்த பின் நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே ஊடகங்களிடம் கூறியதாவது:
நேபாளத்தில் இருந்து வந்து முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்றதைப் பெருமையாக நினைக்கிறேன். இதுபோன்ற லீக் போட்டிகள் இளம் வீரர்களின் திறமையை வளர்க்க உதவும். கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கவும், பரபரப்பாக வைத்திருக்கவும் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகள் அவசியமாகும்.

நேபாளத்தில் என்னைப் போன்ற ஏராளமான திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு மட்டுமே இந்த முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. கரீபியன் லீக்கில் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிக்காக இந்தஆண்டு நான் விளையாடினேன். நேபாளிகளுக்கு கிரிக்கெட் பயணம் தொடங்கி இருக்கிறது, அடுத்தடுத்துஅதிகமான வாய்ப்புகளை அவர்கள் பெறுவார்கள். நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை எப்படிக் கற்றுக் கொள்கிறோம் என்பதில்தான் வளர்ச்சி இருக்கிறது. எனக்கு இந்த ஒன்றரை மாதத்தில் ஏராளமான விஷயங்களைக் கற்றேன்.

சிறந்த கேப்டன், அனுபவமான பயிற்சியாளர், நட்புடன் பழகிய சகவீரர்கள் என இனிய அனுபவமாக இருந்தது. மைக்கேல் கிளார்க்கின் கிரிக்கெட் அகாடெமியில் சேர்ந்து பயிற்சி எடுத்ததால், என்னை அவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

இந்தப் போட்டியில் நான் பந்து வீசிய முறை குறித்து பாராட்டுக்கள் தெரிவித்தார். எனக்கு இந்தப் போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளித்தாலும், டெல்லி அணி தோல்வி அடைந்தது சோகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2018-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி சந்தீப் லாமிச்சனேவை ரூ.2.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Jallikattu 2019 | Alanganallur

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து