முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் ரூ.2 கோடியில் புதிய கட்டிட பணிகள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அடிக்கல் நாட்டினார்.

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் ரூ.2 கோடியே 65 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய கட்டிட பணிகளுக்கு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2கோடியே 65 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பல்வேறு வகையான அரசு கட்டிட பணிகளுக்கு கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:- முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து தமிழகத்தில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை குறிக்கும் வகையில்  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்;. நூற்றாண்டு விழா கட்டடங்கள் என்ற பெயரில் ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கூடுதலாக 8 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்கள் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்;ட அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான பணிகளை துவக்கிடும் வகையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
 இந்த புதிய கட்டிடமானது 1275.50சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. தரைத்தளம் 403.50  சதுரமீட்டர், முதல் தளம் 403.50 சதுரமீட்டர், இரண்டாம் தளம் 403.50 சதுர மீட்டர் மற்றும் முகப்புபகுதி 45 சதுரமீட்டர் பரப்பளவிலும் கட்டப்பட உள்ளது. தரைத்தளத்தில் 2 வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் முதல்தளத்தில் 2 வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் இரண்டாம் தளத்தில் 4 வகுப்பறைகளும் கட்டப்பட உள்ளது. மேலும் அனைத்து தளத்திலும் மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி கழிப்பறை வசதிகள் தனித்தனியாக கட்டப்படவுள்ளது. கட்டிடத்தின் முன்புறம் மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில் சாய்தள பாதையும், ஆழ்குழாய் கிணறு, மேல்நிலை நீர்தேக்க தொட்டி, மழைநீர் சேகரிப்பு அமைப்புடனும் அழகிய போர்டிகோ மற்றும் அழகிய முகப்புத் தோற்றத்துடன் கட்டப்பட உள்ளது. இந்தப் பணிகளை விரைந்து முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். அதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட அண்ணாநகரில்; தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2017-18 நிதியின் மூலமாக ரூ 25 லட்சம் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள சமுதாயக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
 இந்நிகழ்ச்சிகளில் ராமநாதபுரம் பொதுப்பணித்துறை தொழில் நுட்பக்கோட்டம் செயற்பொறியாளர் சத்திய வாகீஸ்வரன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் எஸ்.பார்த்தசாரதி உட்பட கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து