ஆப்கனில் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி

திங்கட்கிழமை, 14 மே 2018      உலகம்
afghan bomb blast 2018 5 14

காபூல் : ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் 12 பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில், ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணத்திலுள்ள ஜாலாலாபாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் 12 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பலத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் குண்டுவெடிப்பை நடத்திய நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்த 4 நபர்கள் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

மே 9 ஆம் தேதி ஆப்கன் தலைநகர் காபூலில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர்.

ஆப்கன் உள் நாட்டுப் போர்

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகள் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு தலிபான் அமைப்பைப் சேர்ந்த தற்கொலைப்படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மைக்காலமாக தலிபான்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து

VadaChennai Review | VadaChennai Movie Review | Dhanush | Vetrimaaran | Santhosh Narayanan

Vada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து