அமெரிக்க தனியார் நிறுவனங்கள் வடகொரியாவில் தொழில் தொடங்கலாம்

திங்கட்கிழமை, 14 மே 2018      உலகம்
trump-kim 2018 5 14

வாஷிங்டன் : அமெரிக்க தனியார் தொழில் நிறுவனங்கள் வடகொரியாவில் தொழில் தொடங்கலாம் என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.
கடந்த வாரம் வடகொரியா பயணம் மேற்கொண்டதையடுத்து இத்தகைய அறிவிப்பை மைக் வெளியிட்டிருக்கிறார். அணு ஆயுத சோதனைகளை முற்றிலுமாக வடகொரியா நிறுத்தும் பட்சத்தில் இது சாத்தியமாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து மைக் பாம்பியோ பாக்ஸோ பாக்ஸ் நியூஸ்ஸில் கூறும்போது, “அமெரிக்க தனியார் துறையினர் வடகொரியாவில் அதிக அளவிலான மின்சக்தியைக் கட்டமைக்க உதவுவார்கள். வடகொரிய மக்களுக்கு உள்கட்டமைப்பு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் முதலீடு செய்து அமெரிக்கர்களால் உதவ முடியும். இவை அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நிறுத்தும் பட்சத்தில் சாத்தியமாகும்” என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் வரும் ஜூன் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் இதுகுறித்த ஒப்பந்தம் உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன. ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை நடத்தியது.

தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதற்கு அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் பெரிது உதவியதை தொடர்ந்து அமெரிக்கா வடகொரியா இடையே நட்பு மலர்ந்துள்ளது.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து