முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழுக்க முழுக்க சீனாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிக் கப்பல் வெள்ளோட்டம்

திங்கட்கிழமை, 14 மே 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : முழுக்க முழுக்க சீனாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிக் கப்பலின் வெள்ளோட்டம்  தொடங்கியது.

இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான "சைனா டெய்லி' நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:

முழுவதும் சீனாவிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கிக் கப்பல், ஞாயிற்றுக்கிழமை வெள்ளோட்டத்தைத் தொடங்கியது. 50,000 மெட்ரிக் டன் எடை கொண்ட, இன்னும் பெயரிடப்படாத அந்தக் கப்பல் டாலியன் கப்பல் கட்டும் தளத்திலிருந்து விசைப் படகுகள் மூலம் கடலுக்கு இழுத்து வரப்பட்டது. கடலுக்கு வந்ததும், கப்பல் தனது சொந்த என்ஜினின் சக்தியில் இயங்கத் தொடங்கியது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, சோவியத் யூனியன் காலத்தில் கட்டப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலை உக்ரைனிடமிருந்து வாங்கி மறுகட்டமைப்பை மேற்கொண்ட சீனா, லியோனிங் என்ற பெயரில் அந்தக் கப்பலை 2012-ஆம் ஆண்டு தனது கடற்படையில் சேர்த்துக் கொண்டது.

எனினும், தற்போதுதான் முதல் முறையாக முழுவதும் சீனாவிலேயே உருவாக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் வெள்ளோட்டத்துக்கு விடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தக் கப்பல், வரும் 2020-ஆம் ஆண்டில் சீன கடற்படையில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டிலிருந்தே லியோனிங் கடற்படையில் இயக்கப்பட்டு வந்தாலும், சீனா எதிர்காலத்தில் மேலும் பல விமானம் தாங்கிக் கப்பல்களைத் தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளவே அது பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து