குடியேற்ற அனுமதி விரைந்து அளிக்க விமான நிலையங்களில் வருகிறது இ-கேட்

திங்கட்கிழமை, 14 மே 2018      இந்தியா
e-gate airport 2018 5 14

புதுடெல்லி : இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர் குடியேற்ற அனுமதி அளிக்க விமான நிலையங்களில் இ-கேட்கள் நிறுவப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

இதுகுறித்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர் குடியேற்ற அனுமதியைப் பெற நீண்ட வரிசை யில் நிற்க வேண்டியுள்ளது. சில விநாடிகளில் அவர்களுக்கு குடியேற்ற அனுமதி அளிக்க விமான நிலையங்களில் இ-கேட்கள் நிறுவப்படும். இ-கேட்களில் வெளிநாட்டவர் சென்று ஆவணங்கள், விரல் ரேகைப் பதிவுகளை அளித்தால் அதற்கான கருவிகள் அவற்றை சரிபார்த்து உடனடியாக குடியேற்ற அனுமதியை அளித்துவிடும்.

அபாயம் இல்லாத நாட்டு குடிமக்களுக்கு மட்டுமே இந்த வசதி அளிக்கப்படும். எந்தெந்த நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு இந்த வசதி அளிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து