கமல் நடத்தும் மாநாட்டில் நல்லகண்ணு பங்கேற்க மாட்டார்: முத்தரசன் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      தமிழகம்
mutharasan 2018 5 15

சென்னை : கமலஹாசன் நடத்தும் மாநாட்டில் நல்லகண்ணு பங்கேற்க மாட்டார் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

காவிரி வரைவு திட்ட அறிக்கை தமிழகத்திற்கு சாதகமாக இல்லை என்று எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக வரும் 19- ம் தேதி ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட உள்ளார். அந்த கூட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணு தலைமை தாங்க உள்ளதாக கமல் அறிவித்திருந்தார். மேலும் கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன், கட்சி தலைவர்களை நேரிடையாக சந்தித்து கமல் அழைப்பும் விடுத்து வருகிறார்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சென்னை கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன்,


மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நடைபெறும் காவிரி கூட்டத்திற்கு கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தலைமை ஏற்க ஒப்புதல் தரவில்லை என்றும், நல்லகண்ணுவின் ஒப்புதல் இல்லாமலேயே கமல் தன்னிச்சையாக இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காவிரி விவகாரம் குறித்து நல்லக்கண்ணு தலைமையில் சென்னையில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று கமல் அறிவித்திருந்த நிலையில் முத்தரசன் மறுப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து