கர்நாடகாவில் பா.ஜ.க. வெற்றி- தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்கிறார் தமிழிசை

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      தமிழகம்
TamilisaiI 2017 9 10

சென்னை : கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்று உள்ளதால், தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில்  வாக்கு சதவீதத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாவிட்டாலும் பல்வேறு தொகுதிகளில் காங்கிரசைவிட பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பாரதிய ஜனதா வெற்றி குறித்து தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-


பாஜக மீதும், மோடி மீதும் கர்நாடக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பிரசாரம் கர்நாடகாவில் எடுபடவில்லை. கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. உள்ளது. கர்நாடகாவில் பாஜக வெற்றியால் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும். பிரதமர் மோடிக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்.  காங்கிரஸ், இனி வேறு எங்கும் ஆட்சியமைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து