கேப்டனாக இருந்து வெற்றியில் செஞ்சூரி அடித்த சி.எஸ்.கே கேப்டன் டோனி !

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      விளையாட்டு
Captain Dhoni 2018 5 15

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து 100 வெற்றிகளை குவித்து எம்எஸ் டோனி சாதனைப் படைத்துள்ளார்.

டோனி நியமனம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் டி20 லீக் தொடர் தொடங்கப்பட்டது. தொடக்க வருடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடம்பிடித்திருந்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்எஸ் டோனி நியமிக்கப்பட்டார். 2008-ல் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி இருந்து வருகிறார். 2016 மற்றும் 2017 சீசனில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பெறவில்லை. இவரது தலைமையில் இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.


100 வெற்றிகள் ...

சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய எல்லா சீசனில் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அத்துடன் சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி வாகை சூடியுள்ளது. ஐபிஎல் 11-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான 46-வது லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கேப்டனாக இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 100 வெற்றிகளை தேடிக்கொடுத்து சாதனைப் படைத்துள்ளார். மேலும், டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் 86 வெற்றிகளையும், சாம்பியன்ஸ் லீக்கில் 14 வெற்றிகளையும் ருசித்துள்ளது.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து