முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபார பந்து வீச்சினால் பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      விளையாட்டு
Image Unavailable

இந்தூர் : ஐ.பி.எல். போட்டியின் 48-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியின் அபார பந்து வீச்சில் 88 ரன்களில் சுருண்டது பஞ்சாப் அணி.

48-வது லீக்

ஐ.பி.எல். போட்டியின் 48-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் இந்தூரில் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். அதன் படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெய்லும் களமிறங்கினர்.

ராகுல் அதிரடி

தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ராகுல் 3 சிக்ஸர்கள் விளாச அணியின் ஸ்கோர் 36-ஆக இருக்கும் போது உமேஷ் பந்து வீச்சில் கேட்ச் ஆன ராகுல் 21 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் கெய்ல் 18 ரன்களில் உமேஷ் யாதவ்வின் ஆக்ரோஷமான பந்து வீச்சில் வெளியேற அடுத்ததாக ஆரோன் பிஞ்ச் களமிறங்கினார்.

அபாரமான பீல்டிங்

இதனிடையே கருண் நாயர் 1 ரன்னில் வெளியேற, அடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் பெங்களூரு அணியினரின் சிறப்பான பந்து வீச்சு மற்றும் அபாரமான பீல்டிங்கால் ரன் சேர்க்க முடியாமல் திணறினர். ஆரோன் பிஞ்ச் (26 ரன்கள்) தவிர, களமிறங்கிய அனைத்து வீரர்களும் ஒற்றை ரன்களில் வெளியேற திக்குமுக்காடிய பஞ்சாப் அணி 15.1 ஓவர்களில் வெறும் 88 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், சிராஜ், சகால், கிராந்தோமே மற்றும் மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை ரன் அவுட்டில் இழந்தது குறிப்பிடத்தக்கது.

‘பிளேஆப்’ வாய்ப்பில்...

இதனை அடுத்து 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி  8.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் விராட்கோலி 28 பந்தில் 48 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), பார்த்தீவ் பட்டேல் 22 பந்தில் 40 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெற்ற 5-வது வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி ‘பிளேஆப்’ வாய்ப்பில் நீடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து