அணு ஆயுத மையம் அழிப்பு: தென் கொரிய செய்தியாளர்களுக்கு வட கொரியா அழைப்பு

புதன்கிழமை, 16 மே 2018      உலகம்
vadakoria

பியாங்கியாங்: வட கொரியாவின் அணு ஆயுத சோதனை மையம் அடுத்த வாரம் அழிக்கப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக தென் கொரிய செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென் கொரிய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வட கொரிய அதிபர் கிம்-ஜோங் உன் இடையிலான சந்திப்புக்கு முன்னதாக, வட கொரியாவின் அணு ஆயுத சோதனை மையங்களை அழிப்பதாக அந்த நாடு வாக்குறுதி அளித்துள்ளது.

அதன்படி, மே மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை அணு ஆயுத சோதனை மையங்களை மூடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக வட கொரிய வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில், இந்த நடவடிக்கைகளை நேரில் பார்வையிடுவதற்கு தென் கொரியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கு வட கொரியா அழைப்பு விடுக்கப்படும் என்றும் அந்த நாடு கூறியிருந்தது.

அதன் ஒரு பகுதியாக, தென் கொரியாவைச் சேர்ந்த 8 செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து