முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் பதவி வேண்டும்: பகுஜன் சமாஜின் ஒரே எம்.எல்.ஏ. டிமாண்ட்

புதன்கிழமை, 16 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த ஆட்சி அமைந்தால் அமைச்சர் பதவியைத் தர வேண்டும் என்று கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வான மகேஷ் நிர்ப்பந்தம் கொடுக்கத் துவங்கியுள்ளார்.

கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க 104 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 78, மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளில் வென்றன. 2 இடங்களில் சுயேச்சைகள் வென்றனர்.

தனிப்பெரும்பான்மை இல்லாததால் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமியை முதல்வராக்குவதற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

20 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி, ஒரு இடத்தில் மட்டும் வென்றது. கொல்லேகல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் என் மகேஷ் வென்றார். ம.ஜ.த. மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால், அதில் தனக்கு அமைச்சர் பதவியை தர வேண்டும் என்று மகேஷ் தற்போது கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக, ம.ஜ.த. தலைவர் தேவகவுடாவுடன், பகுஜன் சமாஜ் தலைவர் மயாவதி பேசி வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து