முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி 91.1 சதவீதம்

புதன்கிழமை, 16 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டின் மொத்த தேர்ச்சி விகிதம் 91.1 சதவீதம் ஆகும்.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சத்து 60,434 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி, தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

மேலும், அனைத்து மாணவ, மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தாண்டு தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 91.1 சதவீதம் பேர் மொத்தம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2014, 2015 ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் 90.6 சதவீதமாக இருந்தது. 2016-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.4 சதவீதமாக இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 92.1 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு தேர்ச்சி விகிதம் ஒரு சதவீதம் குறைந்துள்ளது. 2014, 2015, 2016 ஆண்டுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த நிலையில், 2017-ம் ஆண்டுதான் மீண்டும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்நிலையில், மீண்டும் தேர்ச்சி விகிதம் ஒரு சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து