சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புப் படி ஜே.டி.எஸ் - காங். கூட்டணியை கவர்னர் அழைக்க வேண்டும்- குலாம்நபி ஆசாத்

புதன்கிழமை, 16 மே 2018      இந்தியா
Supreme Court(N)

பெங்களூர்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப் படி ஜே.டி.எஸ்- காங்கிரஸ் கூட்டணியை கவர்னர் அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் - ஜே.டி.எஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன. இதனிடையே தங்களுக்கு 108 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் தங்களை தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று பா.ஜ.க தரப்பில் கோரப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின்  தீர்ப்புப் படி ஜே.டி.எஸ்-காங்கிரசை அழைக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கர்நாடக கவர்னர் புறக்கணிக்கக் கூடாது. எம்.எல்.ஏக்களிடம் பா.ஜ.க. பேரம் பேச அனுமதிக்கவும் கூடாது. ஜே.டி.எஸ்- காங். கூட்டணிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர் என்றார் அவர்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து