பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது: வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்த்து

புதன்கிழமை, 16 மே 2018      தமிழகம்
ops

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நல்வாழ்த்துக்கள்
இது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட வாழ்த்து செய்தி வருமாறு:-
மாணவப் பருவத்தின் முதற்கட்டத்தை முடித்து, +2 பொதுத் தேர்வினை எழுதி வெற்றி பெற்று, கல்வியில் அடுத்த கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கும் எனது அன்புக்குரிய மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ! வாழ்க்கையில் முன்னேற, ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்தத் தன்னம்பிக்கையை மாணவ-மாணவியருக்கு இளம் பருவத்திலேயே ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை என்பது அமுத மொழியாகும்.

விடாமுயற்சியுடன்...
ஜெயலலிதா உரைத்த தன்னம்பிக்கையுடன் நாட்டிற்கு நன்னம்பிக்கையாக விளங்கும் எனது அன்பு மாணவச் செல்வங்கள் நாளைய தமிழகத்தை பொன்னொளிர் தமிழகமாக மாற்றிடும் மன வலிமையும், உடல் உறுதியும் கொண்டவர்கள் ஆவார்கள். +2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள், தங்கள் விருப்பம் போல் உயர்கல்வி பெற்றிட மனதார வாழ்த்துகிறேன். அந்த வெற்றி வாய்ப்பை சிலர் இழந்தாலும், தன்னம்பிக்கை தளராமல் விடாமுயற்சியுடன் தொடர்ந்து வரும் தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்வியினை தொடர்ந்திடவும், வாழ்வில் உயர்ந்திடவும், எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கல்வியைப் போற்றுவோம்! நாட்டுக்கும் வீட்டுக்கும் நற்பெருமை சேர்ப்போம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து