புதுச்சேரி அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்: ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் அறிவிப்பு

வியாழக்கிழமை, 17 மே 2018      தமிழகம்
EPS-OPS

சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் அதிமுக பிரமுகர் முத்தியால் பேட்டை சந்துருஜி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு

அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் அதிமுக கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட ரணத்தாலும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த முத்தியால் பேட்டை சோலை நகர் குறிஞ்சி வீதி, சந்துருஜி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார், அதிமுகவினர் யாரும் இவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அவர்கள் அறிவித்துள்ளனர்,


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து