எடியூரப்பா பதவியேற்ற நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ மாயம்

வியாழக்கிழமை, 17 மே 2018      இந்தியா
yeddyurappa 2018 5 8

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வின் குதிரை பேரம் தொடங்கியிருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மோடியின் பிடியில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளார்.

பல்வேறு பரபரப்புகளுக்கிடையே நேற்று எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்ததுடன், இன்னும் 15 நாட்களுக்குள் அவர் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து எடியூரப்பா பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவை வளாகத்தில் காங்கிஸ் கட்சியினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷிடம், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சுரேஷ், ‘ஆனந்த் சிங் தவிர அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இங்கே உள்ளனர். ஆனந்த் சிங் மோடியின் பிடியில் உள்ளார் என்று தெரிவித்தார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து