முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர்க்கு அதிகாரம் அளித்தலின் நாடாளுமன்ற குழு கலந்துரையாடல் கூட்டம் மதுரை கலெக்டர் வீர ராகவ ராவ் பங்கேற்பு

வியாழக்கிழமை, 17 மே 2018      மதுரை
Image Unavailable

 மதுரை, - மதுரை மாவட்டம், பசுமலை கேட்வே ஹோட்டலில் மகளிர்க்கு அதிகாரம் அளித்தலின் நாடாளுமன்ற குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ்,    கலந்து கொண்டு நாடாளுமன்ற குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி பேசும் பொழுது தெரிவித்ததாவது:
 இந்திய பாரம்பரிய கலாச்சாரத்திற்கு முன்னோடியாக திகழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு.  குறிப்பாக ஆன்மீகத்திற்கும், கலாச்சார பண்பாட்டிற்கும், விருந்து உபசரித்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட மதுரை மாவட்டத்தில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில், ஆயிரங்கால் மண்டபம், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், திருமலைநாயக்கர் மகால், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன.  உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு மற்றும் மல்லிகைப்பூவிற்கு பெயர் பெற்ற மதுரை மாவட்டத்தில் ஆண்டு தோறும் பல கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 
 கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் மதுரை மாவட்டத்தில் மகளிர்க்கு அதிகாரம் அளித்தல் தொடர்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை புரிந்த  தலைவர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  தமிழ்நாடு அரசின் சார்பாக மகளிர் சமுதாயத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 1,03,000 உறுப்பினர்களைக் கொண்ட 7116 சுயஉதவிக்குழுக்கள் மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. 
 இச்சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு சுயதொழில் புரிவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  மேலும் தொழில் துவங்குவதற்கு மானிய விலையில் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.  பெண்களுக்கான கல்வியினை ஊக்குவிக்கும் வகையில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் படித்த பெண்களுக்கு திருமணத்திற்கான நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.  அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் மூலம் உழைக்கும் மகளிர்க்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது.  இதுமட்டுமல்லாது பிரதம மந்திரியின் முத்ரா திட்டம், வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பெண்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.  பெண் சமுதாயத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மகளிர்க்கென தனி காவல் நிலையம் அமைத்து செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் மகளிர்க்கு அதிகாரம் அளித்தலின் குழுத்தலைவர்  .பிஜோயா சக்கரவர்த்தி   உறுப்பினர்கள்  .அஞ்சு பாலா    .ரேணுகா புட்டா    .ராமாதேவி    .ஜோதி துர்வே    .பூணம்பென்    .ஜெயஸ்ரீபென் பட்டேல்    .ரித்தி பத்தக்    .மால ராஜ்ய லெட்சுமி ஷா    .ஆர்.வனரோஜா    .காகசன் பெர்வீன்    .சதாப்தி ராய்    .ரிட்டா தராய்   உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து