கர்நாடக சட்டசபை தற்காலிக சபாநாயகர் தேஸ்பாண்டே

வியாழக்கிழமை, 17 மே 2018      இந்தியா
karnadaga sapanayagar 2018 05 17

பெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக தேஸ்பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டசபை தேர்தலையடுத்து அங்கு ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, கவர்னர் மாளிகையில், நேற்று காலை 9 மணிக்கு எடியூரப்பா கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராகப் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ள தேஸ்பாண்டே 8 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் ஆவார். தற்போது சட்டசபையில் இவர்தான் மிகவும் அனுபவமிக்க நபர் என்பதால் பா.ஜ.க. அரசு இவர் பெயரை பரிந்துரை செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து