லோதா குழு பரிந்துரைகள் விவகாரம்: பின்னடைவாக கருதும் பி.சி.சி.ஐ.

வியாழக்கிழமை, 17 மே 2018      விளையாட்டு
BCCI 2017 1 8

பி.சி.சி.ஐ மறுசீரமைப்புக்காக லோதா குழு வழங்கிய பரிந்துரைகளில் பெரும்பாலானவை அந்த அமைப்பின் வரைவுச் சட்ட விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது பி.சி.சி.ஐ.க்கான பின்னடைவாக கருதப்படுகிறது.

லோதா குழு பரிந்துரைகளில் பலவற்றுக்கு பி.சி.சி.ஐ. அதிகாரிகள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் பல எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த வழக்கு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்டவரான கோபால் சுப்ரமணியம், அந்தப் பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை வரைவுச் சட்ட விதிகளில் சேர்த்துள்ளார்.

அதில், ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு முறை, பி.சி.சி.ஐ. நிர்வாகிகளுக்கு 18 ஆண்டுகள்  பதவி, அதில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் இடையே இளைப்பாறல் காலம், பி.சி.சி.ஐ. நிர்வாகிகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 70, அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்குமான பணிப் பகிர்வு ஆகிய முக்கியப் பரிந்துரைகள் அடங்கும்.


எனினும், தேர்வுக் குழு உறுப்பினர் எண்ணிக்கையை தற்போதைய அளவான 3-ல் இருந்து, 5-ஆக மாற்றுவதற்கு பரிந்துரைத்துள்ளார். மேலும், டெஸ்ட் வீரர்கள் மட்டும் என்ற பிரிவில், வீரர்களுக்கான குறைந்தபட்ச முதல்தர கிரிக்கெட் போட்டியின் எண்ணிக்கையை 20-ஆக நிர்ணயிக்கவும் பரிந்துரைத்துள்ளார்.

மகளிர் கிரிக்கெட்டுக்கு ரயில்வே அளித்துவரும் ஊக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கு வாக்குரிமை வழங்குவதை கருத்தில் கொள்ளலாம் எனவும் கடந்த அக்டோபரில் உச்ச நீதிமன்றத்துக்கு அளித்துள்ள வரைவுச் சட்ட விதிகளில் கோபால் சுப்ரமணியம் பரிந்துரைத்துள்ளார். எனினும், அந்த வாக்களிக்கும் நபர் முன்னாள் வீரராக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து