முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் கடாபி நிலைதான் ஏற்படும் வடகொரிய அதிபருக்கு டிரம்ப் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 18 மே 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அணு ஆயுதங்களை அழிக்கும் ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் கடாபி நிலைதான் வடகொரிய அதிபர் கிம்முக்கு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் ஜூன் மாதம்  12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச முடிவு செய்திருந்த நிலையில் இந்தச் சந்திப்பு குறித்து கிம்முக்கு அதிபர் டிரம்ப் நிபந்தனைகளை விதித்திருக்கிறார். அதில் அணுஆயுத அழிப்புக்கு வடகொரியா அதிபர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது முதன்மையானது. இதற்கு கிம் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் லிபியா அதிபர் கடாபிக்கு ஏற்பட்ட நிலைதான் கிம்முக்கு ஏற்படும் என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் டிரம்ப் கூறும் போது, கடாபியின் அழிவை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் அவரை அழிக்க அங்குச் சென்றோம். ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் அந்த நிலை மீண்டும் ஏற்படும். ஆனால் ஒப்பந்தத்துக்கு சம்மதித்து விட்டால் கிம் ஜோங் உன் சந்தோஷமாக இருப்பார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து