முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு ஒத்தி வைப்பு

வெள்ளிக்கிழமை, 18 மே 2018      தமிழகம்
Image Unavailable

அருப்புக்கோட்டை: பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டை தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித உதவி பேராசிரியையாக இருந்தவர் நிர்மலாதேவி (50). இவர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு செல்ல அழைப்பு விடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

இந்த நிலையில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனர்.

இம்மனு ஸ்ரீவில்லிபுத்தூர் விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி சிங்கராஜ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலா தேவியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும்  25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து