முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபை இன்று காலை கூடும்: கவர்னர் வஜூபாய் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 18 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: கர்நாடக சட்டசபையை இன்று காலை 11 மணிக்கு கூட்டுமாறு கவர்னர் வஜூபாய் வாலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பா.ஜ.க கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கூட்டணிக்கு மொத்தம் 117 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையை இன்று காலை 11 மணிக்கு கூட்டுமாறு கவர்னர் வஜூபாய் வாலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று காலை நடக்கும் முதல் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய சபாநாயகர் எம்.எல்.ஏ பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். இந்த நிகழ்வு உணவு இடைவேளை வரை நடைபெறும். அதன்பின் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இடைப்பட்ட நேரத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் மற்ற கட்சி உறுப்பினர்கள் பேசாத வகையில், டி.ஜி.பி பாதுகாப்பு அளிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து